ஓசூரில் தொழிலாளர் நலத்துறை அலுவலக ஊழியர் சிவமூர்த்தி என்பவர் மீது கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தச் செயலில் ஈடுபட்ட ஆதித்யா என்பவர், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டின் முன் வாகனம் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆதித்யா தனது காரை சிவமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஏற்றியதில் சிவமூர்த்தி உயிரிழந்தார்; அவரது மகன், மருமகள் மற்றும் 6 மாத குழந்தை காயமடைந்தனர்.
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அக்கட்சியினர் சட்டத்தை மதிக்காமல் அராஜகத்தில் ஈடுபடுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினத்தில் நடைபெற்ற மயானக் கொள்ளை திருவிழாவின் போது, திமுக ஒன்றியச் செயலாளரின் மகன் ஆகாஷ் என்பவர் தலைமையிலான கும்பல் கத்தி மற்றும் ஆயுதங்களால் தாக்கியதில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
ஏற்கனவே கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ஆகாஷ் மீது இருந்தும், காவல்துறை அவர் மீது முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் மமதையில் திமுக-வினர் போடும் வெறியாட்டம்; நடவடிக்கை எடுக்காத பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கண்டனம்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் “புரட்சித் தமிழர்” @EPSTamilNadu அவர்கள் pic.twitter.com/82ksTmmo7s
— AIADMK – SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) February 23, 2026
“>
இந்த இரண்டு சம்பவங்களையும் சுட்டிக்காட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி, குற்றவாளிகள் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மீது பெயரளவிற்கு நடவடிக்கை எடுக்காமல், உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
