சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ, சிறந்த வளர்ப்பு முறைக்கும் குடிமைப் பண்பிற்கும் மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த சிறுவன் ஒருவன், சிப்ஸ் சாப்பிடும்போது அதன் துகள்களைத் தற்செயலாகக் கீழே சிந்திவிட்டான்.
பொதுவாக இதுபோன்ற நேரங்களில் பெற்றோர்களே அதனைச் சுத்தம் செய்வார்கள் அல்லது ஊழியர்களிடம் விடுவார்கள். ஆனால், அந்தச் சிறுவனின் தந்தை, பொது இடத்தைச் சுத்தமாக வைத்திருப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பதைத் தன் மகனுக்கு உணர்த்த விரும்பினார்.
தன் மகன் சிந்திய துகள்களை அவனையே குனிந்து எடுக்கச் சொல்லி, பொறுப்புள்ள ஒரு குடிமகனாக அவனை மாற்ற அந்தத் தந்தை எடுத்த முயற்சி அனைவரையும் கவர்ந்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்து ரசித்து வருகின்றனர். “குழந்தைகளுக்குச் சிறுவயதிலிருந்தே இது போன்ற நற்பண்புகளைக் கற்றுக்கொடுத்தால், அவர்கள் எதிர்காலத்தில் சிறந்த குடிமக்களாகத் திகழ்வார்கள்” எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
தேசப்பற்று என்பது வெறும் முழக்கங்களில் மட்டுமல்ல, இது போன்ற அன்றாடச் செயல்களிலும் ஒளிந்திருக்கிறது என்பதை
View this post on Instagram
“> இந்தத் தந்தை உணர்த்தியுள்ளார். நல்ல வளர்ப்பு முறைக்கு இந்த வீடியோ ஒரு பாடமாக அமைந்துள்ளதாக இணையவாசிகள் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.
