ரயிலில் நிம்மதியாகப் பயணம் செய்ய நினைத்த பயணியிடம், ஐஆர்சிடிசி (IRCTC) ஊழியர் ஒருவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அருணாச்சல சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் 2AC பெட்டியில் பயணி ஒருவர் தனது செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த பேண்ட்ரி பாய் (Pantry Boy) அவரிடம் மிகவும் மோசமான தொனியில் கத்தத் தொடங்கியுள்ளார். “நாங்கள் ஒரு மணி நேரத்தில் மூன்று முறை வந்துவிட்டோம்” என்று திமிராகப் பேசிய அந்த ஊழியரால் ஆத்திரமடைந்த பயணி, தனது ‘அப்பர் பெர்த்’தில் இருந்து கீழே இறங்கி வந்து, “உன் மேலாளரை அழைத்துக் கொண்டு வா, அவனிடம் தான் பணம் தருவேன்” என்று எகிறியுள்ளார்.
2AC coach me log sukoon aur safe safar ke liye ticket lete hain, lekin Train No. 22411 Arunachal Superfast Express me Sleeper/General jaisa haal hai..vendors aa kar passengers ko disturb kar rahe hain.
Kindly send RPF assistance immediately.@RailMinIndia @AshwiniVaishnaw pic.twitter.com/Y7E9UEitbq— Md Manzer Ali Rinku (@BaBa_8055) February 18, 2026
”நீ யார்?” என்று அந்த ஊழியர் ஒருமையில் பேச, பொறுமை இழந்த பயணி அவரை ‘பதட்டமீஸ்’ (பண்பற்றவன்) என்று சாடியுள்ளார். இந்த மோதல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், வீடியோ எக்ஸ் (X) தளத்தில் வைரலானது. உடனடியாகத் தலையிட்ட ஐஆர்சிடிசி அதிகாரிகள், கோச் மேனேஜர் ராகுல் சிங் மூலம் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். 2AC டிக்கெட் எடுத்துவிட்டு பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்ய வேண்டியிருப்பதாகப் புகார்கள் எழுந்த நிலையில், ரயில்வே நிர்வாகத்தின் விரைவான நடவடிக்கைக்கு அந்தப் பயணி பின்னர் நன்றியும் தெரிவித்துள்ளார்.
