கேரள மாநிலம் கோழிக்கோடு எரஞ்சிப்பாலம் பகுதியில், ஸ்கூட்டரில் சென்ற நபர் ஒருவர் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் தோண்டப்பட்டிருந்த ஆழமான சாக்கடை கால்வாய்க்குள் தலைகீழாக விழுந்த சிസിடிவி காட்சி இணையத்தில் அதிர வைப்பதாக உள்ளது. ஒலவண்ணா பகுதியைச் சேர்ந்த நிசார் என்பவர், மலாப்பறம்பு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது ஒரு காரை முந்த முயன்றுள்ளார். அப்போது சாலையில் கொட்டப்பட்டிருந்த மணலில் ஸ்கூட்டர் சறுக்கியதில், அவர் அப்படியே தூக்கி வீசப்பட்டு கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்த ஆழமான ஓடைக்குள் விழுந்தார்.
VIDEO | Kerala: A scooter fell into an under-construction drain, injuring a passenger in Kozhikode. More details awaited.
(Source: Third Party)#Kerala pic.twitter.com/nFNBrMg9RQ
— Press Trust of India (@PTI_News) February 18, 2026
இந்த விபத்தின் காட்சிகள் தற்போது எக்ஸ் (X) மற்றும் பிற சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாலை விரிவாக்கப் பணிகள் நடக்கும் இடங்களில் போதிய பாதுகாப்பு எச்சரிக்கைகள் இல்லாததே இதுபோன்ற விபத்துகளுக்குக் காரணம் என நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர். நல்லவேளையாக, ஓடைக்குள் விழுந்த நிசாருக்கு பலத்த காயம் ஏற்பட்டாலும், அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த பகீர் வீடியோ, சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
