உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள இந்திராபுரம் பகுதியில், சிப்ரா மால் அருகே செவ்வாய்க்கிழமை இரவு ஒரு டீ கடைக்கு வெளியே இரண்டு இளம்பெண்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
முதலில் ஏதோ ஒரு விஷயம் தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் தொடங்கிய நிலையில், அது திடீரென ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் அளவிற்கு முற்றியது. சாலையில் நின்றபடி அவர்கள் இருவரும் கூச்சலிட்டு, தலைமுடியைப் பிடித்து இழுத்து சண்டையிட்டுக் கொண்ட காட்சிகள் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்தச் சண்டையை அங்கிருந்த யாரோ வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது தற்போது வைரலாகி வருகிறது. வீடியோவில் ஒரு பெண் போலீஸாரை அழைப்பதாக மிரட்டுவதும் பதிவாகியுள்ளது.
इंद्रापुरम में में चाय की टपरी पर भिड़ गई पापा की परियां!#Ghaziabad#ViralVideo#Papakipariya#Indirapuram#NewsFlash@ghaziabadpolice@Uppolice pic.twitter.com/j9e4l3MEze
— Goldy Srivastav (@GoldySrivastav) February 18, 2026
“>
இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது. எதற்காக இவர்கள் சண்டையிட்டுக் கொண்டார்கள் என்பதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்று கூறியுள்ள போலீஸார், இது குறித்துத் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
