ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள டோரண்டா பகுதியில் சொகுசு கார் ஓட்டி வந்த நபர் ஒரு இளைஞரை மோதியதோடு கார் பானட்டில் தொங்கியபடி பல கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
रांची: बोनट पर लटका युवक, मर्सिडीज दौड़ाता रहा वकील
◆ डोरंडा क्षेत्र में लग्जरी मर्सिडीज कार से हिट एंड रन की घटना का वीडियो आया सामने
◆ चालक ने युवक को कई किलोमीटर तक बोनट पर लटकाए रखा #Ranchi | Ranchi Hit and Run | Mercedes Car pic.twitter.com/0uR19tRlHE
— News24 (@news24tvchannel) February 17, 2026
சிறிய தகராறு காரணமாக காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்ற அந்த நபர் வழியில் தடுத்த ஊர்க்காவல் படை வீரர்கள் மீதும் காரை ஏற்ற முயன்றுள்ளார். அந்த இளைஞரின் அலறல் சத்தத்தைப் பொருட்படுத்தாமல் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற கார் ஓட்டுநர் அங்கு அவரைச் சிறைவைத்து கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இது குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கறிஞரைக் கைது செய்ததுடன் அவரது சொகுசு காரையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
