இந்தியாவின் முதல் ‘மெல்லிசை சாலை’ மும்பை கடற்கரை சாலையில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. நாரிமன் பாயிண்ட் மற்றும் வோர்லி இடையே அமைக்கப்பட்டுள்ள இந்த 500 மீட்டர் நீளமுள்ள சாலையில், வாகனங்கள் மணிக்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்போது ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தின் புகழ்பெற்ற “ஜெய் ஹோ” பாடல் ஒலிக்கிறது.
சாலையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு ரம்பிள் ஸ்ட்ரிப்கள் மீது டயர்கள் உரசும்போது ஏற்படும் அதிர்வுகளால் இந்த இசை உருவாகிறது. மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இதனைத் திறந்து வைத்தார்.
View this post on Instagram
“>
சுமார் 6.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஹங்கேரிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தருவதோடு சாலைப் பாதுகாப்பையும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
🚨 India’s first musical road is playing Jai Ho on Mumbai road. pic.twitter.com/eb8buf6n41
— Indian Tech & Infra (@IndianTechGuide) February 11, 2026
“>
வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட வேகத்தைச் சீராகப் பராமரிக்க இது ஊக்கமளிக்கும். ஜப்பான், ஹங்கேரி போன்ற நாடுகளில் ஏற்கனவே உள்ள இந்தத் தொழில்நுட்பம் தற்போது இந்தியாவிலும் அறிமுகமாகியுள்ளது. இதற்காகச் சுரங்கப்பாதையின் உள்ளே ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
