உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூரில், ஆறு நாய்க்குட்டிகள் கொடூரமான முறையில் கிணற்றில் வீசிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 25-ஆம் தேதி நள்ளிரவில் நடந்த இந்தச் சம்பவத்தின் போது, அந்தக் குட்டிகளின் தாய் நாய் அருகிலேயே நின்று தவித்துக் கொண்டிருந்தது மனதை உருக்குவதாக உள்ளது.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து, பீட்டா அமைப்பு தலையிட்டு காவல்துறையினருடன் இணைந்து சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது.
இதனைத் தொடர்ந்து, மிர்சாபூர் காவல்துறையினர் பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் விலங்கு வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விலங்குகளைக் கொல்லுதல் அல்லது ஊனப்படுத்துதல் என்பது ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய கடுமையான குற்றமாகும்.
View this post on Instagram
“>
தற்போது இந்த மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
