இன்றைய காலத்தில் சமூக வலைதளங்களில் புகழ்பெறுவதற்காக இளைஞர்கள் எதையும் செய்யத் துணிகிறார்கள். சில நேரங்களில் இது போன்ற முயற்சிகள் விபரீதத்தில் முடிந்துவிடுகின்றன. அப்படி ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ஒரு இளைஞர் ஓடும் இரயிலுக்கு மிக அருகில் நின்று கொண்டு செல்ஃபி வீடியோ எடுத்துக்கொண்டிருக்கிறார். அப்போது அந்த இரயிலில் பயணம் செய்த மற்றொரு நபர், வாசலில் நின்றபடி வீடியோ எடுத்துக்கொண்டிருந்த இளைஞனை எட்டி உதைக்கிறார்.

இதில் நிலைதடுமாறி அந்த இளைஞர் கீழே விழும் காட்சி பார்ப்பவர்களைப் பதற வைக்கிறது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டதிலிருந்து லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Rajesh Kumar meena (@rajeshkumarmeena1994)

“>

வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சிலர் அந்த இளைஞரின் அஜாக்கிரதையான செயலைக் கண்டிக்கும் அதே வேளையில், இன்னும் சிலர் இது போன்ற ஆபத்தான இடங்களில் வீடியோ எடுப்பவர்களுக்கு இது ஒரு பாடம் என்று கூறி வருகின்றனர்.

“எச்சரிக்கையாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்” எனப் பலரும் சமூக அக்கறையுடன் பதிவிட்டு வருகின்றனர்.