குஜராத் மாநிலம் சாபர்காண்டா மாவட்டத்தில உள்ள சலால் கிராமத்தில், கடந்த 5 ஆண்டுகளாக இயங்கி வந்த ‘ஸ்ரீ சத்ய டைரி ப்ராடக்ட்ஸ்’ என்ற போலி பால் தொழிற்சாலையை உள்ளூர் குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாகக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த தொழிற்சாலையில் வெறும் 300 லிட்டர் சுத்தமான பாலைக் கொண்டு, அதனுடன் யூரியா உரம், டிடர்ஜென்ட் தூள், காஸ்டிக் சோடா, சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மற்றும் சோயா பீன் எண்ணெய் ஆகியவற்றை கலந்து தினசரி 1,800 லிட்டர் போலி பாலை தயாரித்து விற்பனை செய்து வந்தது அம்பலமானது.
गुजरात के साबरकांठा में डिटर्जेंट व यूरिया से नकली दूध बनाने वाली फैक्ट्री का भंडाफोड़ हुआ है
◆ एलसीबी ने पांच साल से चल रही यूनिट पर छापा मारकर 71 लाख का सामान जब्त किया, पांच आरोपी पकड़े गए
◆ एफएसएसएआई ने कार्रवाई का वीडियो साझा किया, यूनिट सील है और सप्लाई चेन की जांच जारी… pic.twitter.com/8qJ4y1W7Uw
— News24 (@news24tvchannel) February 9, 2026
“>
இந்த நச்சுப் பாலின் அடர்த்தி மற்றும் புரதச்சத்தை செயற்கையாக அதிகரிக்கவே இந்த அபாயகரமான வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சோதனையில் ₹71 லட்சம் மதிப்பிலான போலி பால் பாக்கெட்டுகள் மற்றும் மூலப்பொருட்களைப் பறிமுதல் செய்த போலீசார், தொழிற்சாலைக்குச் சீல் வைத்தனர்.
#Gujarat A major joint raid in Himatnagar, Gujarat, has shut down a dairy unit producing milk from Urea and Palm Oil. The raid was conducted by Food Safety Dept. Gujarat. Investigation into the supply chain is underway. #FSSAIAction #FSSAIinStates #FSSAIAction pic.twitter.com/YIIFaHn1jT
— FSSAI (@fssaiindia) February 8, 2026
“>
இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள தொழிற்சாலை உரிமையாளர் ராகேஷை போலீசார் தேடி வருகின்றனர்.
