சென்னை: சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களைக் கண்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று (பிப். 9) சென்னையில் மீண்டும் கணிசமாக அதிகரித்துள்ளது.

அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ. 230 உயர்ந்து ரூ. 14,650-க்கும், ஒரு சவரன் ரூ. 1,840 உயர்ந்து ரூ. 1,17,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலையைப் பின்பற்றி வெள்ளியின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது;

வெள்ளி கிராமுக்கு ரூ. 15 உயர்ந்து ரூ. 300-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 15,000 உயர்ந்து ரூ. 3,00,000-க்கும் விற்பனையாகிறது. அண்மைக் காலமாக தங்கம் மற்றும் வெள்ளி விலையில் நிலவி வரும் இந்த தொடர் மாற்றங்கள் நகை வாங்குவோரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.