முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான வரும் பிப்ரவரி 24-ம் தேதி, மதுரையிலோ அல்லது ராமநாதபுரத்திலோ பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தி புதிய கட்சியைத் தொடங்க சசிகலா திட்டமிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தமக்குத் துரோகம் செய்துவிட்டதாகக் கருதும் சசிகலா, தேர்தலில் தனது பலத்தை நிரூபிக்க இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கான பணிகளைத் தனது உறவினர்களிடம் அவர் ஒப்படைத்துள்ளார்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட சசிகலா தரப்பு முதற்கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென் மாவட்டங்களில் அதிக தொகுதிகளில் போட்டியிடவும், தானும் ஒரு தொகுதியில் நேரடியாகக் களமிறங்கவும் சசிகலா முடிவு செய்துள்ளார். சசிகலாவின் இந்த அதிரடித் திட்டம் அதிமுக வட்டாரத்திலும் மற்ற தலைவர்களிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.