பீகார் மாநிலத்தில் உதவி ஆய்வாளர் ஒருவர் ரயிலில் பயணம் செய்யும் போது குப்பைகளை வீசி எறிந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்.கே. பாஸ்வான் என அடையாளம் காணப்பட்ட அந்த அதிகாரி, ரயிலின் கீழ் இருக்கையில் அமர்ந்து கொண்டு வேர்க்கடலை சாப்பிட்டுக் கொண்டே அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் வேர்க்கடலை தோல்களை மிகச் சாதாரணமாக ரயிலின் தரைப்பகுதியில் வீசி எறிந்துள்ளார். ஒரு காவல்துறை அதிகாரியே பொது இடத்தில் இப்படிப் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டது பொதுமக்களிடையே கோபத்தை உண்டாக்கியுள்ளது.
இந்த வீடியோவை எடுத்த நபர், பொது இடங்களில் குப்பைகளை வீசுவதற்கு அரசாங்கத்தையோ அல்லது ரயில்வே துறையையோ குறை சொல்வதில் அர்த்தமில்லை என்றும், இது மக்களின் சுய ஒழுக்கம் மற்றும் பொது அறிவைப் பொறுத்தது என்றும் சாடியுள்ளார்.
சமீபத்தில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலிலும் இதேபோல குப்பைகள் வீசப்பட்டிருந்ததை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
This is also Modi’s fault.
— Kreately.in (@KreatelyMedia) January 29, 2026
“>
“சீருடை அணிந்த அதிகாரியே இப்படிச் செய்வது வெட்கக்கேடானது” எனப் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
