சென்னையில் இன்று நீண்ட நாட்களுக்கு பிறகு ஆபரண தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 4,800 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,29,600 ரூபாய்க்கும், ஒரு கிராம் 16,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 17,673 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,41,384 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு பத்து ரூபாய் குறைந்து ஒரு கிராம் 415 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 10,000 ரூபாய் வரையில் குறைந்து 4,15,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
