வெளிநாட்டிலிருந்து தனது சொந்த நாட்டுக்குத் திரும்பிய ஒரு நபர், முறையான ஆவணங்கள் இருந்தும் எல்லை வழியாக வராமல், யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக ஊடுருவ முயன்றுள்ளார். எல்லை பாதுகாப்பு படையினரிடம் கையும் களவுமாக சிக்கிய அவரிடம் விசாரணை நடத்திய போதுதான் அந்தச் சிரிப்பலை கலந்த ‘பகீர்’ உண்மை வெளிவந்தது.

விசாரணையில் அந்த நபர், “நான் குறித்த நேரத்திற்குள் வீட்டுக்கு வரவில்லை என்றால், என்னை வீட்டிற்குள் சேர்க்க மாட்டேன் என்றும், விவாகரத்து செய்துவிடுவேன் என்றும் என் மனைவி மிரட்டியிருந்தார்.

ஏற்கனவே நேரம் கடந்துவிட்டதால், முறையான சோதனைகளுக்குக் காத்திருந்தால் இன்னும் தாமதமாகும். மனைவியின் அடிக்கு பயந்துதான் இப்படி குறுக்கு வழியில் வந்தேன்” என்று அதிகாரிகளிடம் கண்ணீர் மடித்தார்.

குற்றவாளிகள் அல்லது கடத்தல்காரர்கள்தான் இப்படி எல்லை தாண்டுவார்கள் என்று நினைத்த பாதுகாப்பு படையினருக்கு, மனைவியின் பயத்தால் ஒரு நபர் இப்படி ரிஸ்க் எடுத்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அவரது ‘பொண்டாட்டி பயத்தைப்’ பார்த்து அதிகாரிகள் ஒரு நிமிடம் வாயடைத்துப் போயினர்.