சமீபகாலமாக ரீல்ஸ் மோகத்தில் இளைஞர்கள் செய்யும் சில காரியங்கள் பொதுமக்களுக்கு எரிச்சலையும் அதிர்ச்சியையும் தருகின்றன. அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் வீடியோவில் ஒரு ஸ்கூட்டரில் மூன்று பேர் பயணிக்கின்றனர்.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஸ்கூட்டரை ஒரு வாலிபர் ஓட்ட, அவருக்குப் பின்னால் மற்றொரு வாலிபர் பின்னோக்கி (வண்டியின் பின்புறம் பார்த்தபடி) அமர்ந்திருக்கிறார்.

அவருக்குப் பின்னால் ஒரு இளம்பெண் அமர்ந்து அந்த வாலிபருடன் நெருக்கமாக ரொமான்ஸ் செய்தபடி பயணிக்கிறார். ஹெல்மெட் அணியாமல், டிராபிக் விதிகளைத் துளியும் மதிக்காமல் இவர்கள் செய்த இந்தச் செயல் பார்ப்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது.

எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை பல ஆயிரக்கணக்கானோர் பார்த்து பகிர்ந்து வருகின்றனர். “நண்பனின் காதலுக்காகத் தன் உயிரையும் அடமானம் வைத்து வண்டி ஓட்டும் அந்த நண்பனைத் தான் பாராட்ட வேண்டும்” என்று சிலர் கிண்டலாகக் கமெண்ட் செய்தாலும், பெரும்பாலானோர் இது போன்ற ஆபத்தான செயல்களை வன்மையாகக் கண்டித்து வருகின்றனர்.

இது எந்த ஊரில் நடந்தது என்ற விபரம் தெரியவில்லை என்றாலும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து இது போன்ற அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.