சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ பயங்கரமாக வைரலாகி வருகிறது. அதில் சில சிறுவர்கள் தெருவோரத்தில் இருந்த ஒரு பெரிய குப்பைத் தொட்டியை (Dustbin) தங்கள் விளையாட்டுப் பொருளாக மாற்றியுள்ளனர்.

விளையாட ஊஞ்சல் கிடைக்காததால், குப்பைத் தொட்டியின் கைபிடியைப் பிடித்துக் கொண்டு அதையே ஊஞ்சலாக நினைத்துத் தொங்கி விளையாடத் தொடங்கினர்.

 

View this post on Instagram

 

A post shared by Ashutosh (@clipsbyx1_)

ஆரம்பத்தில் ஜாலியாகத் தொங்கிக் கொண்டிருந்த போது எல்லாம் சரியாகத்தான் இருந்தது. ஆனால், திடீரென ஒரு சிறுவன் வேகமாகத் தொங்கியபோது, அந்தப் பெரிய குப்பைத் தொட்டி பாரம் தாங்காமல் அப்படியே தலைகீழாகக் கவிழ்ந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால், அந்தத் தொட்டி கவிழ்ந்த வேகத்தில் அதன் உள்ளே இருந்த குப்பைகள் அனைத்தும் விளையாடிய சிறுவர்கள் மேலேயே கொட்டியது.

விளையாடப் போய் கடைசியில் குப்பைக்குள் சிக்கிக்கொண்ட சிறுவர்களின் அந்தத் ‘திணறிய’ தருணம் பார்ப்போரை விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது.

இந்த வீடியோவைப் பார்த்து வரும் நெட்டிசன்கள், “இது தேவையா உங்களுக்கு?” என்றும், “பழைய ஞாபகங்கள் வந்துவிட்டது” என்றும் ஜாலியாகக் கமெண்ட் செய்து வருகின்றனர்.