சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ பலரையும் கோபப்பட வைத்துள்ளது. ஒரு பிட்சா டெலிவரி செய்யும் இளைஞர், எதிர்பாராத விதமாகச் சாலையில் தனது பள்ளித் தோழியைச் சந்திக்கிறார். அவரைப் பார்த்ததும் நலம் விசாரிப்பதற்குப் பதிலாக, அந்தப் பெண் தனது அலைபேசியில் வீடியோ எடுக்கத் தொடங்குகிறார். “பள்ளிக்கூடத்தில் எல்லாருக்கும் மோட்டிவேஷன் கொடுத்த நீ, இன்னைக்கு பிட்சா டெலிவரி பண்ற நிலைமையில இருக்கியா?” என்று மிகக் கேவலமாகச் சிரித்துக் கொண்டே அந்த இளைஞரை ஏளனம் செய்கிறார். அதுமட்டுமில்லாமல், “இந்த வீடியோவை நம்ம மத்த பிரண்ட்ஸ்க்கும் அனுப்புறேன் பாரு” என்று அவரது உழைப்பைக் கொச்சைப்படுத்தினார்.
A pizza delivery boy met his school-time female friend on the road…
She started recording and mocked him: "You used to motivate everyone in school… and now you're delivering pizza?"Then she said she’ll send the video to other friends too.
She laughed… but didn’t think for a… pic.twitter.com/hkSzH04O6x
— Saffron Chargers (@SaffronChargers) January 29, 2026
ஆனால், அந்தப் பெண்ணுக்குத் தெரியவில்லை, ஒரு ஆணின் வாழ்க்கை எவ்வளவு சவாலானது என்று! பல நேரங்களில் வயதுக்கு மீறிய பொறுப்புகள் தலைமேல் வந்து விழும்போது, சொந்தக் கனவுகளைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, குடும்பத்திற்காக எந்த வேலைக்கும் செல்லும் துணிச்சல் ஆண்களுக்கு மட்டுமே உண்டு. பிட்சா டெலிவரி செய்வது கேவலமான வேலை அல்ல; ஒருவனின் போராட்டத்தைக் கண்டு எள்ளி நகையாடுவதுதான் அசிங்கம். சுயமரியாதையை அடகு வைக்காமல் உழைக்கும் அந்த இளைஞர் நிஜமான ஹீரோ, அவரைச் சிரித்து மகிழ்ந்த அந்தப் பெண் வெறும் வேடிக்கை மனிதர் மட்டுமே!
