தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, தமிழகத்தில் காங்கிரஸ் தரப்பில் முன்வைக்கப்படும் ‘ஆட்சியில் பங்கு’ என்ற கோரிக்கையைத் திமுக ஏற்காது என்பதைத் திட்டவட்டமாகக் கனிமொழி தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கூட்டணியில் இருப்பவர்களுக்கு ஆட்சியில் பங்கு அளிக்கும் நடைமுறை இல்லை என்பதை ராகுல் காந்தியிடம் அவர் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளைப் பிப்ரவரி மாதம் இரு கட்சிகளும் அமைக்கும் குழுக்கள் மூலம் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவையற்ற கருத்துக்களைத் தவிர்த்துவிட்டு, தேர்தல் பணிகளில் இணைந்து செயல்பட ராகுல் காந்தியும் சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், ஆட்சியில் பங்கு என்பது குறித்துத் தேவையில்லாத கருத்துக்களைத் தவிர்க்குமாறு தனது கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்துமாறும் கனிமொழி இச்சந்திப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.
