சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, காதலில் நடக்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. தனது காதலி தனக்குத் துரோகம் செய்கிறாளோ என்று சந்தேகப்பட்ட இளைஞர் ஒருவர், அவளுக்குப் பாடம் புகட்ட ஒரு உணவகத்தில் ‘சர்ப்ரைஸ்’ திட்டமிட்டார். காதலியின் கண்ணைக் கட்டி ஒரு மேஜையில் அமர வைத்த அவர், அந்தப் பெண் யாருக்கெல்லாம் தெரியாமல் வலை விரித்திருந்தாரோ, அந்த இதர 5 காதலர்களையும் அதே இடத்திற்கு வரவழைத்தார்.

​கண்ணைத் திறந்த அந்தப் பெண், தனது 6 காதலர்களும் ஒரே இடத்தில் நிற்பதைப் பார்த்து நிலைகுலைந்து போனார். ஒரே நேரத்தில் 6 ஆண்களை அந்தப் பெண் ஏமாற்றி வந்தது அம்பலமானதும், அங்கிருந்தவர்கள் அவரிடம் சரமாரியாகக் கேள்வி கேட்கத் தொடங்கினர். கடைசியில் தப்பிக்க வழியில்லாமல் அந்தப் பெண் தேம்பித் தேம்பி அழுத காட்சி வீடியோவாக வெளியாகி இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.