இன்று நடைபெற்ற 77-வது குடியரசு தின விழாவின் போது, பார்மர் மாவட்ட ஆட்சியர் டீனா டாபி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். கொடியை ஏற்றி முடித்தவுடன், அவர் எந்தத் திசையில் திரும்பி நின்று மரியாதை செலுத்த வேண்டும் (Salute) என்பதில் ஒரு நிமிடம் குழம்பிப் போனார். கொடிக்கு எதிராகத் திரும்ப வேண்டியவர், தவறுதலாக வேறு பக்கம் திரும்பி நின்று சல்யூட் அடிக்கத் தயாரானார். உடனே அவருக்குப் பின்னால் இருந்த பாதுகாப்பு அதிகாரி மெதுவாகச் சைகை காட்டி அவரைச் சரியான திசைக்குத் திருப்பினார். இந்தச் சில நொடிக் குழப்பம் வீடியோவாக வெளியாகி, சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
2016 UPSC AIR-1
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 pic.twitter.com/0PhTvNuhZm— BRADDY (@braddy_Codie05) January 26, 2026
யுபிஎஸ்சி (UPSC) தேர்வில் முதலிடம் பிடித்த ஒரு அதிகாரிக்குக் கூடவா கொடி ஏற்றும் நடைமுறைகள் தெரியாது என்று ஒரு தரப்பினர் கிண்டல் செய்து வருகின்றனர். “கேமரா எங்கே இருக்கிறது என்று பார்த்ததில் கொடி எங்கே இருக்கிறது என்று மறந்துவிட்டாரோ?” என நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். அதே சமயம், மனிதர்களுக்குப் பொது இடங்களில் இது போன்ற சின்னச் சின்னத் தவறுகள் நடப்பது இயல்புதான் என்றும், இதை இவ்வளவு பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் டீனா டாபிக்கு ஆதரவாகவும் பல குரல்கள் எழுந்து வருகின்றன.
