ஹைதராபாத்தில் உள்ள ஒரு பிட்சா ஹட் (Pizza Hut) கிளையில், சோமாட்டோ டெலிவரி ஊழியர் ஒருவர் அங்கிருந்த ஊழியர்களால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டிருக்கிறார். இதற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா? அந்த உணவகத்திற்கு வாடிக்கையாளர்கள் கொடுத்த குறைந்த ‘ரேட்டிங்’ (Rating) தான்! வாடிக்கையாளர்கள் கொடுத்த ரேட்டிங்கிற்கு டெலிவரி பாய் எப்படி பொறுப்பாவார் என்று அவர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அங்கிருந்த ஊழியர்கள் அதைக் கேட்கவே இல்லை.

​முதலில் அந்தத் தம்பியைத் தரக்குறைவாகப் பேசி கிண்டல் செய்த ஊழியர்கள், பிறகு வாக்குவாதம் முற்றி அவரைத் தரதரவென இழுத்துப்போட்டு அடித்துள்ளனர். இந்த மொத்தக் காட்சிகளும் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் கொடுத்த புகாரின் பேரில், இப்போது ஹைதராபாத் போலீசார் பிட்சா ஹட் ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ரேட்டிங் குறைஞ்சா சாப்பாட்டுத் தரத்தை உயர்த்தணும், அதை விட்டுட்டு இப்படி அப்பாவி டெலிவரி பாயை அடிக்கலாமான்னு சமூக வலைதளங்களில் மக்கள் கொதிச்சுப் போயிருக்காங்க!