உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில், சமாஜ்வாடி கட்சி எம்.பி பிரியா சரோஜ் மற்றும் அவரது வருங்கால கணவர் ரிங்கு சிங் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வின் போது, கட்சி ஆதரவாளர் ஒருவர் செல்ஃபி எடுப்பதற்காக எம்.பி பிரியா சரோஜுக்கு மிகவும் அருகாமையில் வந்ததால் அவர் கடும் அசௌகரியத்திற்கு உள்ளானார்.

இந்நிலையில் அந்த நபர் எல்லை மீறி நெருங்கி வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிரியா சரோஜ், உடனடியாக அவரை விலகிச் செல்லுமாறு சைகை காட்டினார். இந்தச் சங்கடமான சூழல் அங்கிருந்தவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

“>

மேலும் பிரியா சரோஜ் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய உடனேயே, அருகில் இருந்த கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் மற்றும் பாதுகாவலர்கள் நிலைமையைச் சீர்செய்ய முன்வந்தனர். அந்தத் தொண்டரை அங்கிருந்து அப்புறப்படுத்தியதோடு, பொது இடங்களில் பெண் பிரதிநிதிகளிடம் நடந்துகொள்ள வேண்டிய விதம் குறித்து அறிவுறுத்தப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பொதுவெளியில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் காக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இது மீண்டும் வலியுறுத்துவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.