மகாராஷ்டிர மாநிலம் லாத்தூர் மாவட்டத்தில், கணவன் வீட்டிற்கு தாமதமாக வந்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், ஒரு தாய் தனது பச்சிளம் பெண் குழந்தையையே கொலை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அன்றாட குடும்பத் தகராறு மற்றும் கணவனின் நடத்தை மீதான கோபத்தால் ஆவேசமடைந்த அந்தப் பெண், தனது பிஞ்சு குழந்தையைத் தாக்கி உயிரிழக்கச் செய்துள்ளார்.
இந்நிலையில் இந்த கொடூரச் செயல் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட பெண்ணைக் கைது செய்துள்ளனர்.
மேலும் ஒரு தாயே தன் குழந்தைக்கு எமனாக மாறிய இந்த சம்பவம், கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத மனநிலை மற்றும் குடும்ப உறவுகளுக்குள் நிலவும் விரிசல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தற்போது இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், உயிரிழந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
