தாய்மை என்பது இந்த பூமியில் கடவுளின் மிகப்பெரிய வரம். அதற்குச் சான்றாக ஒரு நெகிழ்ச்சியான வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு தாய் சாலையோரம் அமர்ந்திருக்கும்போது, அவரது பெரிய மகன் பின்னால் இருந்து கண்களைப் பொத்திக் கொள்கிறான். அப்போது எதிர்பாராத விதமாக, அவளது சின்னஞ்சிறு மகன் ஒரு பூவை ஏந்தியபடி நடந்து வந்து, அம்மாவின் முன்னால் மண்டியிட்டு நிற்கிறான். கண்கள் திறக்கப்பட்டதும், தன் சிறுவன் கையில் பூவுடன் மண்டியிட்டு நிற்பதைக் கண்ட அந்தத் தாய், பரவசத்தில் திக்குமுக்காடிப் போகிறாள். அந்தப் பிஞ்சு மகன் கொடுத்த பூவை வாங்கி, அன்போடு அவனை முத்தமிடுகிறாள்.
This little guy kneeling and giving his mom a flower , then starting to jump around from excitement is ridiculously adorable 🥰
— Be Believing (@Be_Believing) January 19, 2026
தாய் – மகன் இடையிலான இந்த உன்னதமான அன்பைப் பார்த்த பலரும் கண்கலங்கிப் போயுள்ளனர். பூவைப் பெற்றுக்கொண்ட அம்மாவின் மகிழ்ச்சியைக் கண்ட அந்தச் சிறுவன், துள்ளிக் குதித்து ஆனந்தமாக ஆடுவது பார்ப்பவர்களின் மனதை உருக்குவதாக உள்ளது. ட்விட்டரில் பகிரப்பட்ட இந்த 19 விநாடி வீடியோ, இதுவரை 44 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. “வாழ்க்கையின் உண்மையான அழகு அம்மாவின் அருகில்தான் இருக்கிறது” என நெட்டிசன்கள் தங்களது நெகிழ்ச்சியான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இந்த வைரல் காட்சி, அன்பு என்பது விலையுயர்ந்த பரிசுகளில் இல்லை, அது உண்மையான உணர்வுகளில் தான் இருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது.
