சென்னையில் நேற்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “எதிர்க்கட்சிகளே இல்லாத சட்டமன்றத்தை உருவாக்குவோம்” என்று அமைச்சர் ரமேஷ் திருச்சியில் பேசியதற்குத் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் ‘இன்னும் கொஞ்சம் ஆதரவு கொடுத்திருக்கலாம்’ என்று தங்களின் நபர் ஒருவர் கூறியதைக் குறிப்பிட்ட சீமான், அவருக்குக் கிடைத்த இந்த ஆதரவே அதிகம் என்றும், தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய அரசியல் பேரிடர் நடந்திருக்கிறது என்றும் கடுமையாக விவரித்துப் பேசியுள்ளார்.