அமெரிக்காவில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில், டிக்கெட் எடுக்காமல் திருட்டுத்தனமாக உள்ளே நுழைய முயன்ற நபர் ஒருவருக்கு அங்கிருந்த நபர் ஒருவர் சரியான பாடம் புகட்டியுள்ளார். முன்னால் டிக்கெட் எடுத்துவிட்டுச் செல்பவருக்கு மிக நெருக்கமாக ஒட்டிச் சென்று (Tailgating), தானும் உள்ளே நுழைந்துவிடலாம் என அந்த நபர் கணக்கு போட்டுள்ளார். இதைக் கவனித்த ஒரு பொறுப்புள்ள குடிமகன், உடனடியாக அந்த நபரைச் சட்டையைப் பிடித்து இழுத்து நுழைவு வாயிலுக்கு வெளியே தூக்கி எறிந்தார்.
– A man was tailgating someone without a metro ticket in the US.
– A citizen immediately caught him and threw him out of the station gate
This is how responsible citizens should deal with rule breakerspic.twitter.com/NUONuaboiG
— 🚨Indian Gems (@IndianGems_) January 20, 2026
சட்டம் மற்றும் விதிகளை மதிக்காமல் நடப்பவர்களைக் கண்டால், ஒதுங்கிப் போகாமல் தட்டிக் கேட்க வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது. தவறு செய்தவரை அந்த இடத்திலேயே தடுத்து நிறுத்தி வெளியேற்றிய அந்த நபரின் துணிச்சலான செயலுக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. பொதுச் சொத்துக்களையும் விதிகளையும் மதிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பதை இந்த வைரல் வீடியோ மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.
