பீகார் மாநிலம் பாட்னாவில் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த 18 வயது மாணவி உயிரிழந்த வழக்கில், பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 9-ம் தேதி விடுதி அறையில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட அந்த மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆரம்பத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்ட நிலையில், மாணவியின் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

தற்போது வெளியாகியுள்ள பிரேதப் பரிசோதனை அறிக்கையில், மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தை அடுத்து, விடுதி உரிமையாளர் மனிஷ் குமார் ரஞ்சனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

தற்போது இந்த வழக்கை விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதுடன், எய்ம்ஸ் மருத்துவமனையின் இறுதி அறிக்கைக்காகப் போலீசார் காத்திருக்கின்றனர்.