பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பணத்தகராறு காரணமாக வாலிபர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையைச் சேர்ந்த தேவிந்தர் சிங் என்பவர், அச்சு இயந்திரம் வாங்குவதற்காகத் தச்சர் சம்ஷேர் சிங்கின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் தேவிந்தர் சிங் தலையில் அடிபட்டு உயிரிழந்தார். இதனால் பதற்றமடைந்த சம்ஷேர் சிங், ரம்பத்தை வைத்து உடலை ஆறு துண்டுகளாக வெட்டிச் சிதைத்துள்ளார்.
வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சம்ஷேரின் மனைவி குல்தீப் கவுர், இந்த கொடூரச் செயலை மறைக்கத் தனது கணவருக்கு உதவியுள்ளார். இருவரும் சேர்ந்து உடல் பாகங்களை ஒரு பிளாஸ்டிக் பெட்டியில் அடைத்து, இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வீசியுள்ளனர்.
கண்காணிப்பு கேமரா காட்சிகளின் உதவியுடன் போலீஸார் இந்தத் தம்பதியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். உயிரிழந்தவரின் ஒரு கையைத் தெருநாய்கள் கவ்விச் சென்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
