விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஊடகப் பிரிவு முதன்மைச் செயலாளராக இருந்த பனையூர் பாபு, திடீரென தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் சீட்டுக்காகவோ அல்லது பதவிக்காகவோ விசிகவை விட்டு வெளியேறவில்லை என்றும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு விசிகவில் நடந்த சில அரசியல் நகர்வுகள் மற்றும் நிர்பந்தங்கள் காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாகவும் கூறினார்.

மேலும், த.வெ.க. தலைவர் விஜய் பெயரளவில் மட்டுமே அம்பேத்கர் மற்றும் அண்ணாவைத்தனது கொள்கைத் தலைவர்களாக வைத்துள்ளார் என்றும், விசிகவின் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க தனது சொந்தப் பணத்தில் தொடங்கப்பட்ட ‘வெளிச்சம்’ தொலைக்காட்சி என்றும் விசிகவிற்காகவே தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் உணர்ச்சிப்பூர்வமாகத் தெரிவித்தார்.

அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் கொள்கைப் பாதையிலேயே தனது அரசியல் பயணம் தி.மு.க.விலும் தொடரும் என்று குறிப்பிட்ட பனையூர் பாபு, விசிக தலைவர் திருமாவளவனுக்கு மாநில ஆட்சியில் மட்டுமல்லாமல் ஒன்றிய

அரசிலும்ஆட்சியில் பங்குபெறும் தகுதி இருக்கிறது என்றும், கொள்கை மாறாமல் இருக்க அவர் ஒன்றிய அரசிலேயே அமைச்சர் ஆகியிருக்கலாம் என்றும் தனது அதிரடி விவாதங்களை முன்வைத்துள்ளார்.