தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள் ஒன்றும் மந்திரவாதி அல்ல என்றும், அவர் வந்தவுடனேயே கையைத் தூக்கி ‘ஜீ பூம் பா’ என்று எல்லாவற்றையும் உடனே மாற்றிவிட முடியாது என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். தற்போதைய தவெக அமைச்சரவையில் உள்ள பலரும் புதியவர்கள் என்று சுட்டிக்காட்டிய அவர், புதிய மருமகள் ஒரு வீட்டுக்குள் வந்தவுடன் அஞ்சறைப் பெட்டி எங்குள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளவே சில காலம் பிடிக்கும் என்ற எதார்த்தமான பழமொழியைக் கூறி புதிய அரசை ஆதரித்துப் பேசியுள்ளார்.

​மேலும், புதிய அரசுக்குக் குறைந்தபட்ச கால அவகாசம் கூட கொடுக்காமல், அதற்குள்ளாகவே அவசர அவசரமாகக் கடுமையான விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைப்பது முறையானது அல்ல என்றும் அது நியாயமற்றது என்றும் அவர் காரசாரமாகக் குற்றம் சாட்டியுள்ளார். சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வரும் திருநாவுக்கரசரின் இந்த அதிரடிப் பேச்சு, தற்சமயம் தமிழக அரசியல் களத்திலும் சமூக வலைதளங்களிலும் மிகப்பெரிய விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.