நாட்டின் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர் ஒருவர், தனது பிறந்தநாளையே மறந்த நிலையில், அவரது மகள் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோ இணையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெறும் 17 வினாடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோவில், பணியில் மும்முரமாக இருந்த வீரரின் மொபைல் போனுக்கு ஒரு வீடியோ கால் வருகிறது. அதில் அவரது மகள் தோன்றி, “பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா” என்று கூறியதும், அந்த வீரர் ஒரு நிமிடம் திகைத்துப் போகிறார்.
தேசப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதால், தனது சொந்த பிறந்தநாளையே அவர் மறந்திருந்தது அந்த வீடியோவில் வெளிப்படுகிறது.
தற்போது எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவை லட்சக்கணக்கான மக்கள் பார்த்து பகிர்ந்து வருகின்றனர். அந்த வீரரின் கண்களில் தெரிந்த சிறிய தயக்கமும், பின் வந்த புன்னகையும் உண்மையான தேசப்பற்றையும், குடும்பத்திற்காக அவர்கள் செய்யும் தியாகத்தையும் காட்டுவதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
An Indian soldier is so engrossed in his duties that he forgets his birthday and his daughter wishing him should touch your chord pic.twitter.com/2lLh6Un0Mz
— Maithili (@SuvarnBharat) January 5, 2026
“>
எல்லையில் வீரர்கள் விழிப்புடன் இருப்பதால்தான் நாம் நிம்மதியாக உறங்குகிறோம் எனப் பாராட்டி வரும் மக்கள், அந்தத் தந்தை – மகள் இடையேயான பாசப் பிணைப்பைக் கண்டு நெகிழ்ந்து வருகின்றனர்.
