கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற குறுகிய நோக்கத்தில் பேசும் நயினார் நாகேந்திரனுக்கு பதில் சொல்லி தனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று கூறினார்.
இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடைபெற்று வருவதாகவும், உண்மை என்ன என்பது விசாரணை முடிவில் தெரியவரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விஜய் தாமதமாக வந்ததைப் பற்றி மட்டும் பேசும் நயினார் நாகேந்திரன், அவர் ஏன் விளக்குகளை அணைத்தார் மற்றும் காவல்துறையின் பேச்சைக் கேட்காமல் மாற்றுப் பாதையில் சென்று கூட்ட நெரிசலை ஏற்படுத்தினார் என்பது பற்றி ஏன் பேசவில்லை என்று செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பினார்.
முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக துணை நின்றதை மக்கள் அறிவார்கள் என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கூறப்படும் இது போன்ற கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை என்றும் அவர் சென்னை நிகழ்ச்சியில் பேசும் போது தெரிவித்தார்.
