பிரபல அமெரிக்க யூடியூபர் ஐஷோஸ்பீட், உலகின் அதிவேக விலங்கான சிறுத்தையுடன் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. கடந்த ஜனவரி 3-ம் தேதி வெளியான இந்த வீடியோவில், சிறுத்தையும் அவரும் ஒரே நேரத்தில் வேகமாக ஓடத் தொடங்குகின்றனர்.
சிறுத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை முந்திச் சென்றாலும், சற்றும் தளராமல் அவர் ஓடியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பந்தயத்தின் போது அவர் உடலில் சில காயங்கள் இருந்தும், பயமின்றி சிறுத்தையுடன் போட்டியிட்ட அவரது துணிச்சலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
சுமார் 3.5 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ள இந்த வீடியோவைச் சுற்றிப் பல விவாதங்கள் எழுந்துள்ளன. “சிறுத்தை வேகமாக ஓடவே இல்லை, சாதாரணமாக மெதுவாகத்தான் ஓடியது” என்று பலரும் கிண்டலாகக் கூறி வருகின்றனர்.
View this post on Instagram
“>
அதேபோல் “ஒரு விலங்குடன் மனிதன் பந்தயம் போடுவது எப்படிச் சாத்தியம்?” என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர். எது எப்படியோ, ஆபத்தான காரியங்களைச் செய்யத் தயங்காத ஐஷோஸ்பீட்டின் இந்தச் செயல் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது.
