பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மும்பை இல்லமான ‘மன்னத்’ வாசலில், சக்கரி ஜெரேமியா என்ற சமூக ஊடகப் பிரபலம் “சம்மக் சல்லோ” பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தப் பாடலுக்கு அவர் ஆடிய விதம் அங்கிருந்த ரசிகர்களையும் பொதுமக்களையும் வெகுவாகக் கவர்ந்தது. பலரும் தங்கள் செல்போன்களில் இந்த நடனத்தைப் பதிவு செய்யத் தொடங்கினர். சில மணி நேரங்களிலேயே இந்த வீடியோ சுமார் 7.5 லட்சம் பார்வைகளைப் பெற்றுப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த வீடியோ இவ்வளவு வைரலாவதற்கு ஒரு முக்கியமான பின்னணிக் கதை இருக்கிறது. ஒரு நாளைக்கு முன்புதான், அதே இடத்தில் நடனமாட முயன்ற சக்கரி, அங்குள்ள கூட்டத்தைப் பார்த்துப் பயந்து பாதியிலேயே நடனத்தை நிறுத்திவிட்டார். ஆனால், தற்போது தனது பயத்தைப் போக்கி, மிகுந்த தன்னம்பிக்கையுடன் மீண்டும் அதே இடத்தில் அவர் ஆடியது பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
“>
சமூகக் கவலையை வென்று அவர் மீண்டும் சிறப்பாகச் செயல்பட்டதைப் பாராட்டி, நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.
