சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் கேப்டன் பொறுப்பை சஞ்சு சாம்சனிடம் ஒப்படைப்பது குறித்து அணி நிர்வாகம் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாகச் செயல்பட்ட அனுபவம் கொண்ட சஞ்சு சாம்சன், தான் வழிநடத்திய 66 போட்டிகளில் 33 போட்டிகளில் அணியை வெற்றி பெறச் செய்து 50% வெற்றி விகிதத்தை வைத்துள்ளார். இந்தச் சிறப்பான அனுபவத்தின் காரணமாகவே தற்போது சஞ்சு சாம்சனின் பக்கம் காற்று வீசத் தொடங்கியுள்ளது.

​மறுபுறம், கடந்த சீசனில் கேப்டனாகச் செயல்பட்ட ருதுராஜ் கெய்க்வாட்டின் குறைவான ஸ்ட்ரைக் ரேட் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. கேப்டன்சி என்ற கூடுதல் சுமை இல்லாத பட்சத்தில், ருதுராஜால் தனது இயல்பான அதிரடி பேட்டிங்கில் முழு கவனம் செலுத்த முடியும் எனச் சிஎஸ்கே நிர்வாகம் கணக்குப் போடுகிறது. சஞ்சு சாம்சனை சென்னை அணியின் கேப்டனாக நியமித்தால், அதைச் சிஎஸ்கே ரசிகர்கள் முழு மனதுடன் ஏற்றுக்கொள்வார்களா என்ற சுவாரஸ்யமான விவாதம் தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே சூடுபிடித்துள்ளது.