விலங்கு மற்றும் மனிதர்களுக்கு இடையிலான அன்பை வெளிப்படுத்தும் வீடியோக்கள் எப்போதும் இதயத்தை தொட்ட அந்த வகையில், ஒரு தாய் தனது குழந்தைக்கு ஊட்டுவது போலவே தனது செல்ல நாய்க்குப் பருப்பு சாதம் ஊட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்தப் பெண் நாயின் மார்பில் உணவு சிந்தாமல் இருக்க ஒரு துணியைக் கட்டிவிட்டு, தரையில் அமர்ந்து மிக மென்மையாக உணவு ஊட்டுவதைப் பார்க்கும்போது தாய்மையின் உன்னதம் தெரிகிறது.
உணவு உண்டு முடித்ததும் அந்த நாயை அவர் அன்போடு அரவணைத்துப் பேசுவதும், அதை அந்த நாய் உன்னிப்பாகக் கவனிப்பதும் பார்ப்பவர் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த 26 வினாடி வீடியோ, இதுவரை 8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. “குழந்தை யாராக இருந்தாலும் தாய் தாய்தான்” என்றும், “ஆரம்பத்தில் விலங்குகளை வீட்டிற்குள் சேர்க்காத அம்மாக்கள், பிறகு அவற்றைத் தங்கள் சொந்த மகனாகவே மாற்றிக்கொள்கிறார்கள்” என்றும் நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
“>
நம் குழந்தைப் பருவத்தில் அம்மா நமக்கு ஊட்டிவிட்ட நினைவுகளை இந்த வீடியோ மீண்டும் கொண்டு வருவதாகப் பலரும் தங்களது நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
