காரைக்குடி நகரில் நீண்ட நாட்களாகத் தொடரும் பாதாள சாக்கடை அடைப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் புதிய செயற்கை நுண்ணறிவு கருவிகளை தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் டாக்டர். டி.கே. பிரபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நகரின் துப்புரவுப் பணிகளை விரைவுபடுத்துவது குறித்தும், கழிவுநீர் தேங்குவதைத் தடுத்து பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பது குறித்தும் அவர் துறைசார் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மனிதக் கழிவுகளை அகற்றும் பழைய முறைகளுக்கு மாற்றாக இதுபோன்ற அதிநவீன எந்திரங்களையும் ஏ.ஐ கருவிகளையும் பயன்படுத்துவது வரவேற்கத்தக்கது என்று அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

“>

 

இந்த நவீன தொழில்நுட்பம் காரைக்குடி நகரின் தூய்மைப் பணிகளை மேம்படுத்தி, பொதுமக்களின் துயரங்களை விரைவில் போக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.