மேகதாது அணை விவகாரம் தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் CTR நிர்மல் குமார் அவர்கள், திமுகவின் செயல்பாடுகளையும் வரலாற்று முடிவுகளையும் சுட்டிக்காட்டி எழுப்பியுள்ள கடுமையான கேள்விகள், தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய CTR நிர்மல் குமார், “உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் சென்று மேகதாதவில் உண்மையில் என்ன பிரச்சனை என்று கேட்டுப் பாருங்கள். அவருடைய தாத்தா (முன்னாள் முதல்வர் கருணாநிதி) 1970 மற்றும் 1971-ஆம் ஆண்டுகளில் என்ன செய்தார் என்று கேட்டுப் பாருங்கள். 1998-ல் அவரது தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டபோது, அதில் இருந்த என்னென்ன நிபந்தனைகளையெல்லாம் நீக்கினார்கள் என்பதையும் கேட்டுப் பாருங்கள். அரசிதழில் (Gazette) அறிக்கை வெளியிடுவது குறித்து அன்றைய மு.க.ஸ்டாலின் அரசு எதுவும் செய்யவில்லை” என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “உதயநிதி ஸ்டாலினிடம் நான் சொல்வதைக் கேட்டுப் பாருங்கள்; உங்களது கட்சியை வழிநடத்துவதற்கான தகுதி உங்களுக்கு இருக்கிறதா? இன்று இது தொடர்பாக மக்களிடம் வாக்கெடுப்பு நடத்துவதற்கு உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா?” என அதிரடியாகக் சவால் விடுத்தார்.
CTR நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் எழுப்பிய இந்தக் கேள்விகளைத் தொடர்ந்து, செய்தியாளர்களும் எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலினிடம் மேகதாது அணை விவகாரம் குறித்து நேரடி கேள்விகளை எழுப்பினர். ஆனால், இந்தக் கேள்விகளுக்கு எவ்விதப் பதிலும் அளிக்காமல் உதயநிதி ஸ்டாலின் அங்கிருந்து நழுவிச் சென்றுவிட்டார்.
CTR நிர்மல் குமார் காட்டமாக கேள்வி எழுப்பியதையும், அதற்குப் பதில் கூற முடியாமல் உதயநிதி ஸ்டாலின் அங்கிருந்து நழுவிச் சென்றதையும் ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்ட வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் மிக தீவிரமாகப் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
