மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா அரசு ஒரு செங்கல்லைக் கூட வைக்க முடியாது என்று அமைச்சர் KAS அவர்கள் திட்டவட்டமாகக் கூறியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​முன்னதாக, கர்நாடகாவில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வசூல் பாதிக்கக்கூடும் என்பதால் தான், TVK அரசு மேகதாது பிரச்சனை குறித்து எந்தவிதக் கருத்துமே தெரிவிக்காமல் வாய் மூடி மௌனமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன.

​எதிர்க்கட்சிகளின் இந்த விமர்சனங்களுக்கு அதிரடியாகப் பதிலடி கொடுக்கும் விதமாக, கர்நாடகா அரசுக்கு மட்டுமின்றி எதிர்க்கட்சிகளுக்கும் சேர்த்துப் பெரிய அதிர்ச்சியைக் கொடுக்கும் வகையில் அமைச்சர் KAS பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மேகதாது விவகாரத்தில் கர்நாடகா அரசு ஒரு செங்கல்லைக் கூட கட்ட முடியாது என்று மிகத் அழுத்தமாகத் தெரிவித்துள்ளார்.

​மேலும், வரவிருக்கும் சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தொடரில் மேகதாது அணை விவகாரத்தை மிக முக்கியப் பிரச்சனையாக எழுப்ப திமுக திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அமைச்சரின் இந்த அதிரடிப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் தீயாகப் பரவி வருகிறது​.