இந்தியாவின் புகழ்பெற்ற தெருவோர உணவான பானிபூரி அல்லது கோல்கப்பா, பொதுவாகக் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய ஒன்று. ஆனால், வெறும் இரண்டு பானிபூரிகளின் விலை 100 ரூபாய் என விற்பனை செய்யப்படும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அந்த வீடியோவில், ஒரு உணவுப் பிரியர் அதன் அதிக விலை குறித்துக் கேட்க, கடைக்காரரோ எந்த விளக்கமும் அளிக்காமல் “முதலில் ருசித்துப் பாருங்கள், பிறகு நீங்களே விலை சரி என்பீர்கள்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.
வழக்கமான பானிபூரிகளை விட இதில் உருளைக்கிழங்கு மசாலா, காரமான சிப்ஸ் வகைகள், பச்சை மற்றும் சிவப்பு சட்னிகள் என மிகவும் நிதானமாகவும் நேர்த்தியாகவும் அந்த இரண்டு பூரிகள் தயார் செய்யப்படுகின்றன.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். “இதென்ன எதிர்கால விலையா?” என்றும், “அடுத்த மாதம் சம்பளம் வந்த பிறகுதான் என்னால் இந்த பானிபூரியைச் சாப்பிட முடியும்” என்றும் நகைச்சுவையாகக் கமெண்ட் செய்து வருகின்றனர்.
சிலர் ஒரு சாதாரண தெருவோர உணவிற்கு இவ்வளவு அதிக விலையா எனக் கண்டனம் தெரிவித்தாலும், மற்ற சிலரோ அதன் தரம் மற்றும் உழைப்பிற்காக இந்த விலை இருக்கலாம் என ஆதரவு தெரிவித்துள்ளனர்.
View this post on Instagram
“>
விலை ஒருபுறம் அதிர்ச்சியைத் தந்தாலும், அந்தப் பானிபூரியின் சுவை எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தையும் பலரிடையே இது தூண்டியுள்ளது.
