மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான சுரேஷ் கல்மாடி (81) இன்று (ஜனவரி 6) அதிகாலை காலமானார். வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த சில நாட்களாக புனேவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இருப்பினும், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இவரது மறைவுச் செய்தி கேட்டு காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
