மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் ‘ஆன்டிலியா’ இல்லம் உலகின் மிகவும் விலையுயர்ந்த மற்றும் பிரம்மாண்டமான வீடுகளில் ஒன்றாகும். 27 அடுக்குகளைக் கொண்ட இந்த சொகுசு மாளிகையைப் பராமரிக்க மட்டும் சுமார் 600 ஊழியர்கள் கொண்ட ஒரு பெரும் படையே அங்கு பணியமர்த்தப்பட்டுள்ளது.
இதில் தூய்மைப் பணியாளர்கள் மட்டுமின்றி, உயர் ரகப் பாதுகாப்பு வீரர்கள், வெளிநாட்டு உணவுகளைத் தயாரிக்கும் சமையல் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களும் அடங்குவர். இவர்கள் ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் பணியாற்றுவதால், அந்த இல்லம் எப்போதும் ஒரு நட்சத்திர விடுதியைப் போலவே இயங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் சலுகைகள் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கே சவால் விடும் வகையில் உள்ளன. அங்கு பணிபுரியும் ஒரு ஊழியருக்கு சராசரியாக மாதம் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இது தவிர, அவர்களுக்கு உயர்தர மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு மற்றும் அவர்களது குழந்தைகளின் கல்விக்கான நிதி உதவி போன்ற வசதிகளும் வழங்கப்படுகின்றன.
ரிலையன்ஸ் நிறுவனத்தைப் போலவே, முகேஷ் அம்பானி தனது வீட்டு ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து சமூக பாதுகாப்பு நலன்களையும் உறுதி செய்துள்ளார்.
