மும்பையின் வாழ்வாதாரமாகக் கருதப்படும் உள்ளூர் மின்சார ரயிலில் பயணித்த நபர் ஒருவர், சக பயணிகள் அமரும் இருக்கையின் மீது தனது கால்களை வைத்து அமர்ந்துள்ளார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த மராத்தி பேசும் பயணி ஒருவர், “இது கால் வைக்கும் இடமா?” எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அந்த நபர் சக பயணியை கன்னத்தில் அறைந்ததோடு, தகாத வார்த்தைகளால் திட்டி மன்னிப்பு கேட்க வற்புறுத்தினார். இது தொடர்பான வீடியோ ‘லிட் மீம்ஸ் மும்பை’ என்ற பக்கத்தில் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.
இந்தச் சம்பவம் இணையதளவாசிகள் இடையே இருவேறு கருத்துக்களை உருவாக்கியுள்ளது. ஒரு தரப்பினர், ரயிலில் பொது ஒழுக்கத்தைப் பேணாதவருக்குச் சரியான பாடம் புகட்டப்பட்டதாக இந்தச் செயலை ஆதரிக்கின்றனர்.
ஆனால், மற்றொரு தரப்பினர், “சுத்தம் மற்றும் பொது ஒழுக்கம் அவசியம் என்றாலும், ஒருவரை உடல்ரீதியாகத் தாக்குவது சட்டப்படி குற்றம்” எனச் சுட்டிக்காட்டுகின்றனர்.
View this post on Instagram
“>
குறிப்பாக, வடமாநிலத்தவர் என்பதாலேயே அந்தப் பயணி குறிவைக்கப்பட்டதாகச் சில பயனர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், மும்பை மாநகராட்சித் தேர்தல் நெருங்கும் வேளையில் இச்சம்பவம் மராத்தி மொழி மற்றும் பிராந்திய அடையாள அரசியல் குறித்த விவாதத்தையும் மீண்டும் முன்னெடுத்துள்ளது
