சென்னையின் ஒரு சில பகுதிகளில் சில காரணங்களால் திடீரென மின்தடை ஏற்பட்டுள்ள நிலையில், அதன் பின்னணியில் சதி வேலைகள் நடந்திருப்பது போன்ற அதிர வைக்கும் தகவலை மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் வேண்டும் என்றே திட்டமிட்டு, ஃபியூஸ் கட்டைகளைப் பிடுங்கிக் கொண்டு போயிருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், சில இடங்களில் ஒரே மாதிரியான மின்சாரப் பிரச்சனைகள் திரும்பத் திரும்ப வருவதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார்கள் வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த மின்தடைப் பிரச்சனைகளை சரி செய்ய அரசுத் தரப்பில் இருந்து போர்க்கால அடிப்படையில் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் அமைச்சர் நிர்மல்குமார் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
