2026-ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்க இந்தியா முழுவதும் இளைஞர்கள் உற்சாகத்துடன் வீதிகளில் திரண்டனர். சென்னை, பெங்களூரு மற்றும் டெல்லி போன்ற பெருநகரங்களில் இசை கச்சேரிகள் மற்றும் பார்ட்டிகளுடன் கொண்டாட்டங்கள் களைகட்டின. குறிப்பாக கர்நாடக மாநிலம் பெங்களூருவின் எம்.ஜி. சாலை மற்றும் இந்திரா நகர் பகுதிகளில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் விடிய விடிய கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
இருப்பினும், இந்த கொண்டாட்டங்களின் போது பல இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு சாலைகளில் தடுமாறி விழுவதும், மயக்க நிலையில் கிடப்பதும் போன்ற வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குருகிராம் போன்ற நகரங்களிலும் இது போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
<a href=”http://
Fun Without Responsibility Is a Curse: Bengaluru Deserves Better Than Drunken Street Chaos
This is not the culture of Bengaluru. Do not ruin the image of Namma Bengaluru by turning our roads into places of chaos in the name of parties and New Year celebrations. Seeing youths… pic.twitter.com/OIS5XkgP0S
— Karnataka Portfolio (@karnatakaportf) January 1, 2026
“>
இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இந்திய நகரங்களின் கலாச்சாரம் மற்றும் இரவு நேரக் கொண்டாட்டங்களின் தரம் குறித்து பொதுமக்களிடையே காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன.
