சிறு குழந்தைகளின் குறும்புகளும் அப்பாவித்தனமும் எப்போதும் நம்மை ரசிக்க வைக்கும். அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் ஒரு சிறுவன் செய்த செயல் பலரையும் சிரிக்க வைத்துள்ளது. தன் அம்மா சொல்லிக்கொடுத்த ‘எதையும் கழுவிவிட்டுத்தான் சாப்பிட வேண்டும்’ என்ற பாடத்தை அந்தச் சிறுவன் மிகச்சரியாகப் பின்பற்ற நினைத்தான்.
அவனுக்கு முன்னால் ஒரு குலாப் ஜாமுன் வைக்கப்பட்டபோது, அதை அப்படியே சாப்பிடாமல், அம்மா சொன்னதுபோல சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த குலாப் ஜாமுனைத் தண்ணீரில் போட்டு அலசினான்.
அந்த அப்பாவிச் சிறுவனுக்குத் தெரியவில்லை, தண்ணீரில் போட்டால் இனிப்பான சர்க்கரைப் பாகு கரைந்து அதன் சுவையே போய்விடும் என்று இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவை பலரும் ரசித்து வருகின்றனர்.
“சுத்தம் முக்கியம்தான், ஆனா இது கொஞ்சம் ஓவர்தான்”, “அம்மா சொன்னதைச் சரியாகக் கேட்டு நடந்துகொண்டான்” எனப் பலரும் நகைச்சுவையாகக் கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram
“>
ஒரு பயனர், “குலாப் ஜாமுன் சுவை மாறியிருக்கலாம், ஆனால் இந்தச் சிறுவனின் செயல் பலரின் மன அழுத்தத்தைக் குறைத்துவிட்டது” என்று நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ளார். குழந்தைகளின் இந்தத் தெளிவான, அதே சமயம் வேடிக்கையான செயல் இணையத்தில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
