தமிழக முதல்வர் விஜய் இன்று சர்வதேச போதைப்பொருள் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள அண்ணா நினைவிடம் அருகே மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார். சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை நடைபெற்ற இந்த போட்டியில் முதலமைச்சர் விஜயும் கலந்து கொண்டு அங்கிருந்தவர்களோடு ஓடினார். பொதுவாக ஒரு ஃபார்மாலிட்டிக்கு போட்டோ எடுத்துவிட்டு அங்கிருந்து அதிகாரிகள் சென்று விடுவது வழக்கம்.

 

ஆனால் முதலமைச்சர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அவரது பாதுகாவலர்கள், தலைமைச் செயலாளர், டிஜிபி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட வரும் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை ஓடினார். ஏழு முதலமைச்சர் விஜய் ஓடியது மட்டுமல்லாமல் அவருடன் சேர்ந்து இன்று அதிகாரிகளும் மாத்தான் போட்டியில் கலந்து கொண்டு ஓடியது ஹைலட்டான விஷயமாக பார்க்கப்படும் நிலையில் சிறிது ஓய்வெடுத்த நேரத்தில் போட்டியில் கலந்து கொண்ட பெண்கள் அவருடன் செல்பி எடுத்த மகிழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது.