சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 வரையில் உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,05,760 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,220 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலை அதிகரித்து ஒரு கிராம் 14,442 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,15,376 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 5 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 235 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,35,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.