மழை நனைந்த நெடுஞ்சாலையில் இந்திய தம்பதியருக்கும், சட்டையில்லாத வெள்ளை நிற நபர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தச் சம்பவத்தின் தொடக்கத்தில், அந்த வெள்ளை நிற நபர் இந்தியரின் மனைவியிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த இந்தியர், அந்த நபருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரைப் பிடித்து தரையோடு தரையாகப் போட்டுப் பிடித்தார்.

கணவன் மனைவியைக் காப்பாற்றப் போராடும் இந்தத் தீவிரமான காட்சிகளைச் சுற்றி நின்றிருந்தவர்கள் அதிர்ச்சியுடன் கவனித்தனர். அந்த நபருடன் வந்த மற்றொருவர், இருவரையும் பிரிக்க முயலும் காட்சிகளும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோவை இணையத்தில் பார்த்த பலரும் பலவிதமான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். தன் மனைவியைக் காக்க கணவன் துணிச்சலாகச் செயல்பட்டதைப் பாராட்டிச் சிலர் கருத்து தெரிவிக்க, வன்முறை எதற்கும் தீர்வாகாது என்று இன்னும் சிலர் வாதிடுகின்றனர்.

“>

 

அதேசமயம், வீடியோ தொடங்குவதற்கு முன்பு உண்மையில் அங்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை என்றும், முழுமையான பின்னணித் தகவல் தெரிந்தால் மட்டுமே எதையும் உறுதிப்படுத்த முடியும் என்றும் பல நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர். இச்சம்பவம் குறித்து இணையத்தில் விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.